கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் மொழியைப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டிருந்தாலும் அனேகர் கூறக்கூடிய காரணம் தமிழ் மொழியில் படிக்க, எழுத மிகவும் கடினமானது அதிக எழுத்துகள் கொண்டது எனும் தவறான கருத்தை தன்னகத்தே கொண்டு நினைப்பதுவே ஆகும்.
இத் தவறான கருத்தை தகர்த்தெறியவே தொல்காப்பியமும் நன்னூலும் ஒரு நல்ல வழிகாட்டியாகச் செயல்பட்டு அடிப்படைக் கருத்துக்களைத் தெளிவாகக் கொடுத்துள்ளது.
மொழிக்கு முதல் எழுத்துக்கள் 31 ஆகும். அவையாவன உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 ஆயுத எழுத்து 1 ஆகும் இவ்வெழுத்துகள் சேர்ந்து பிற எழுத்துகள் பிறக்கிறது.
ஒலிவடிவத்திலிருந்து தான் வரிவடிவம் எழுதப்பட்டது. நாம் வரி வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒலி வடிவத்தை மறந்ததன் விளைவே தமிழ் மொழி படிக்க எழுத கடுமையானது என்பதாகும்.
குறிப்பாக இன்றைய தலைமுறையிடம் அதிகமாக மொழி கடினமானது எனும் என்னும் ஏற்படுகிறது.
வரிவடிவத்தின் பெயர்களைக் கற்பித்து ஒவ்வொரு எழுத்திற்கும் சரியான உச்சரிப்பைக் கற்பித்தால் தமிழ்மொழிபோல் படிக்க எழுத எளிய மொழி வேறு இல்லை என்பது உறுதியாகும்