அண்ணாமலையார் தமிழ் படிப்பகம்

என்னுடைய

புத்தகங்கள்

இவை எனது ஆராய்ச்சி புத்தகங்கள், 45 நாட்களில் தமிழ் எளிதாக வாசிக்க மற்றும் எழுதுத.

தமிழ் வேர் மழலையர் பள்ளி நிலை 1

தமிழ் வேர் எனும் இப் புத்தகம் மழலையர்பள்ளி நிலை ஒன்றுக்காக( L.K.G) எழுதப்பட்டுள்ளது.
மொழிக்கு உயிர் ஒலியே ஆகும். ஒலியிலிருந்து தான் வரிவடிவம் எழுதப்பட்டது. கற்றல் அடிப்படைத் திறன்களை முறையாக வளர்ப்பதற்கும் எழுத்து, சொல் , சொற்றொடர், பத்தி , பாடம் ஆகியவற்றை விரைவாக வாசிக்கவும், பிழையின்றி எழுதவும் அடிப்படைக் காரணியாக அமைவது ஒலியே ஆகும். சரியாக உச்சரிப்பதன் மூலமே வரிவடிவங்கள் கற்போரிடம் தெளிவு பெறுகிறது.

ஆண்டு முழுமைக்கும் இப் பதினேழு 17 வரிவடிவங்களையும் முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் அடிப்படையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது .

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழலையர் பள்ளிக் குழந்தைகளிடையே ஆய்வு செய்யப்பட்டு வெற்றி ஆக்கப்பட்ட நூல் தமிழ் வேர் எனும் நூலாகும்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு இவ் வடிவத்தின் பெயர்களையும் உச்சரிப்புகளையும் பள்ளி மாணவர்களிடையே மொழியைக் கற்பிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதில் ஐயமில்லை. பேசத் திணறிய குழந்தைகள் கூட வரிவடிவத்தை முழுமையாக முறையாக கற்பார்கள் என்பதற்கு ஆதாரம் ஆசிரியர் கொடுத்துள்ளார் .சிறந்த முறையில் ஆய்வு செய்யப்பட்டு வெற்றி ஆக்கப்பட்ட நூலே தமிழ் வேர் எனும் நூலாகும்.

ஆதாரம்

2001 – 2002 ஆம் கல்வியாண்டில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 7 மாவட்டத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்ட தமிழ் மொழிப் பயிற்சிக் கையேடு என்னும் புத்தகத்தினை ஆதாரமாகக்கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது .

நன்னூலில் இவ் வரிவடிவங்கள் மெய்யெழுத்து பகுதியில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்டுள்ளது.

தமிழ் முதல் எழுத்துகள் மழலையர் பள்ளி நிலை 2

தாய்மொழியில் கற்பித்தல் கற்றலுக்கான மாற்றம் தேவைப்படும்போது பழமை மாறாமல் புதுமையைப் புகுத்த வேண்டும் என்பது மொழிமரபு .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

என்றான் தெய்வப் புலவன்

உலக மொழிகளுக்கெல்லாம் ‘அ’ எனும் எழுத்தே முதன்மையானது என்று வள்ளுவன் வகுத்ததை உலகறியும் .

மொழிக்கு அடிப்படையாக இருப்பது உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18 ஆகிய 30 எழுத்துகள் ஆகும்

முந்தைய வகுப்பில் கற்ற ஒலி, வரிவடிவத்தை அடிப்படையாகக் கொண்டு முதலெழுத்துகள் கற்பிப்பதால் படிப்பதும் எழுதுவதும் முறையாக, எளிமையாக விரைவாக தெளிவாக, புதுமையாக இருக்கும்.

இதுநாள் வரை ‘அ’ எழுத்தை எழுத வேண்டுமெனில் முட்டை போடு, அப்படி போடு, இ ப்படி போடு எனக் கூறி எப்படி எழுத வேண்டும் என்ற நிலை தெரியாது இருந்தது. இந்நிலையை போக்கவே முறையாக வரி வடிவத்தின் பெயர்களை சரியாக ஒலித்துக்கொண்டே எழுதுவதன் மூலம் எழுத்துகளை மாணவர்கள் முறையாக அழகாக எழுதிப் பழகுவார்கள் என்பதில் ஐயம் இல்லை என்பதற்கு ஆசிரியர் சான்று தந்திருக்கிறார்.

தொல்காப்பியரின் சொற்பிறப்பியல் கோட்பாட்டின்படி இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

ஐம்புலன்களின் இயக்கமே வாசித்தல் எனும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தொல்காப்பியரின் கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு எழுத்தையும் சரியாக உச்சரிப்பதன் மூலம் விரைவாக வாசிப்பதற்கும் பிழையின்றி எழுதுவதற்கும் அடித்தளமாக அமையும் .

ஆசிரியர்கள் முறையாக கற்பிக்கவும் மாணவர்கள் தெளிவாக கற்கவும் இந்நூல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழலையர் பள்ளிகளில் ஆய்வு செய்து வெற்றி காணப்பட்டு எழுதப்பட்டுள்ளது.

தமிழ் எழுத படிக்க 45 நாட்கள் மாணவர் கையேடு

முந்தைய வகுப்பில் கற்ற வரிவடிவப் பெயர்கள் முதலெழுத்துகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு
தொல்காப்பியரின் விதியான எழுத்து சொல் பொருள் எனும் அடிப்படைக் கூற்றின்படி ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டதே இந்நூலாகும்.

மெய் எழுத்துகளையும் உயிர் எழுத்தையும் சேர்த்துக் கூறினால் உயிர்மெய் எழுத்து பிறக்கும் எனும் நிலையில் ஒரு சொல்லிற்குஒர் எழுத்தை மட்டும் அறிமுகப்படுத்தி 45 நாட்களில் கற்பித்தல் கற்றல் செயல்பாடுகளை 100% முழுமைப் படுத்தி விடலாம் என்பதற்கான கால அட்டவணை தந்து எளிமையாகப் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்நூல்.

 


மாணவர்கள் முதலில் எழுத்தைப் படித்து எழுதிப் பழகி விட்டு சொல் அறிந்து பொருளறிந்து சொற்றொடரைப் படித்து எழுதக் கற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறாக படி நிலைகள் கொண்டு வரிசைப்படுத்தி புத்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியை 45 நாட்களில் விரைவாகத் தெளிவாக எளிமையாகக் கற்று விடலாம் எனும்
நம்பிக்கை அனைவருக்கும் ஏற்படுகிறது.

கற்பித்தல் கற்றல் செயல்பாடுகள் முழுமை அடைவது மதிப்பீட்டின் வழியாகும் . தொடக்கநிலை மாணவர்களுக்கான மதிப்பீட்டை அளவுகோல் , மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் எழுத்துகள் அனைத்தையும் கற்பிக்கும் வரை படங்களின் வாயிலாக மதிப்பீடு செய்து எழுத்துகளை கற்பித்த பின் எழுத்துக்களால் மதிப்பீடு செய்து பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் பாடத்திற்கும் எளிமையாக பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதே இந்நூலில் சிறப்பாகும்.

ஆசிரியர் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியத்தில் 6 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து 100 மாணவர்களை 45 நாட்களில் படிக்க எழுத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அதனடிப்படையில் ஆசிரியர்கள் மாணவர்களிடையே கொண்டுசென்று வெற்றிகரமாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டது நூலாகும்.ஆசிரியர் இப் புத்தகத்திற்கும் ஆதாரம் அனுப்பி உள்ளார்.

தமிழ் எழுத படிக்க 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு

தமிழ் எழுத படிக்க 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்றான் முண்டாசுக்கவி.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வீர் என நாளும் வாய்ப் பறைசாற்றினான்

 

தாய்மொழிக் கல்வியே சிந்தனையை விரிவுபடுத்தும் இயற்கை முறையாகும். இதுநாள் வரை நாம் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வரிவடிவ பெயர்களையும் ஒவ்வொரு எழுத்திற்கான சரியான உச்சரிப்பு முறைகளையும் ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் மற்றவர்களும் ஒவ்வொரு தமிழரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் அமைக்கப்பட்டது.இந்நூலாகும். ஒலி வரிவடிவத்திற்கான பெயர்களை அறிவதால் எழுத்தை வைத்து எழுத்தைக் கற்பிப்பதால் மாணவர்களுக்கு எழுத்துகள் மறக்காமல் விரைவான வாசித்தலுக்கும் பிழையின்றி எழுதுவதற்கும் அடித்தளமாக அமையும் என்பதை ஆய்வு நோக்கில் வெற்றிகண்டு எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.

சுமார் 100 ஆண்டுகளாக தொல்காப்பியம் நன்னூல் ஆகியவற்றின் அடிப்படையில் எழுத்துகளை எவ்வாறு எளிமையாக சரியாக முறையாக அறிமுகப்படுத்த வேண்டும் என கள ஆய்வு செய்யப்படாத நேரத்தில், தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் எனும் தலைப்பில் இப்புத்தக ஆசிரியர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்18 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட நூல்களில் இந்நூல் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் நம் மொழியில் மறைக்கப்பட்ட மறந்து விடப்பட்ட அனைத்து செய்திகளையும் அடிப்படை தமிழை குறிப்பாக எழுதப் படிக்கத் தேவையான அனைத்து செய்திகளையும் ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி தாய் மொழி பேசும் ஒவ்வொரு தமிழரும் தெரிந்துகொள்ளவேண்டும் நம் மொழியின் எளிமையையும் பயன்களையும் பயன்பாடுகளையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

துறைதோறும் தமிழ் எனும் நிலை போக்கி வீடுதோறும் தமிழ் எனும் நிலை உருவாக்கும் அடிப்படையில் இந்நூல் அமைந்துள்ளது.

தாய் மொழிக் கற்பித்தலில் குழந்தைக்கு பெற்றோர்கள் முதல் ஆசிரியர் அவர் ‘ஆகவே பெற்றோர்களும் நம் தாய்மொழியை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் இது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும்.

தமிழ் மொழியை கற்பிப்பது கற்பது மிக கடினம் எனும் நிலையை போக்க பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன சிறந்த கையேடாக இந்நூல் விளங்குகிறது. நமது பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை குழந்தை பருவத்தில் இருந்தே தெரிந்துகொள்ள வேண்டும் எனும் அடிப்படையில் 5 விளையாட்டுகளை கட்டாயம் விளையாட வேண்டும் என்பதை முதன்மையாக்கி , ஒவ்வொரு திறன்களை குறித்தும் விளக்கமளித்து , 45 நாட்களில் தமிழ் படித்து எழுதுவதற்கான அட்டவணை தந்து பிழை நீக்கி அறிய பகுதிகள் தந்து மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நூலாகும்.

ஒளியை அடிப்படையாக வைத்து எழுத்து சொல் பொருள் சொற்றொடர் முதலியவற்றின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் நடைபெறுவதால் 100% தெளிவான உச்சரிப்பும் பிழையில்லாத கையெழுத்தும் மாணவர்களிடையே உருவாகும் எனும் அடிப்படையில் எழுதப்பட்டது இந்நூல். 

திருவண்ணாமலை மாவட்டம் முழுமைக்கும் உள்ள ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் முறைசாரா கல்வி ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு பயிற்சி அளித்து மூன்றே மாதத்தில் அம்மாவட்ட முழுமைக்கும் உள்ள குழந்தைகளை படிக்க எழுத வைத்து உலக சாதனை முயற்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் மதிப்புமிகு ஐயா கந்தசாமி இ.ஆ.ப , முதன்மை கல்வி அலுவலர் மதிப்புமிகு ஐயா ஜெயக்குமார் ஆகியோர்களின் ஆலோசனைப்படி அனைத்துப் பள்ளிகளிலும் இவ்வாய்வு நூல் கொடுக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளித்து வெற்றி ஆக்கப்பட்ட நூலே இந்நூலாகும்.இதற்கு சான்றாக அம்மாவட்ட ஆட்சித் தலைவரும் முதன்மைக் கல்வி அலுவலர் உலக சாதனைக்கான கருத்தாளர் என்ற சான்றிதழும் பின்னோட்டம் அளித்ததையும் தந்திருக்கிறார் இந்நூலாசிரியர்.

 

தமிழ் கையெழுத்து பயிற்சிக் கையேடு

தாய்மொழியை அழகாக முறையாக எழுதுவதற்கு 5 கோடு போட்ட ஏட்டில் எழுதி பழகும்போது ஒவ்வொரு எழுத்தையும் எந்த இடத்தில் எந்த அளவு சுழிக்க மடக்க முடிக்க வேண்டும் எனத் தெளிவாகத் தெரிந்து எழுதிப் பழகுவர்.எழுத்து ஒரே சீராகவும் முறையாகவும் இருக்கும்.