DTE , B.lit , M .A ,T.P.T , B.ED , PH.D.
இடைநிலை ஆசிரியர் 18 ஆண்டுகளாக தமிழ் வாசிப்பு மற்றும் எழுதும் திறனில் ஆய்வு மேற்கொண்டு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு குழந்தையை 45 நாட்களில் குறையின்றி தெளிவாக வேகமாக வாசிக்கவும் எழுதவும் செய்யலாம் என்ற ஆய்வினை வெற்றிகரமாக முடித்துள்ளேன். தமிழ் வாசிப்பு திறனில் சிக்கல்களும் தீர்வுகளும் எனும் தலைப்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன் தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன் . இதுநாள் வரை யாரும் மேற்கொள்ளப்படாத ஆய்வினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளேன்.
தமிழ்மொழி மிகவும் எளிமையானது அதை உலகம் முழுமைக்கும் எளிமையாக வாசித்தல் எழுதுதல் ஆகிய திறன்களை கொண்டு சேர்க்கும் பொருட்டு எனது ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை 45 நாட்களில் பிழையின்றி எழுத படிக்க வைத்தல். எழுத்துக்கூட்டி படிக்கும் குழந்தைகளை 20 நிமிடத்தில் விரைவாக வாசிக்கப் பயிற்சி அளித்தல். எத்தனை வருடங்கள் தவறாக எழுதினாலும் பரவாயில்லை ஒரு மணி நேரத்தில் பிழை இல்லாமல் எழுத வைத்தல். தொல்காப்பியரின் விதிப்படி ஒவ்வொரு எழுத்தையும் சரியாக உச்சரிக்கப் பயிற்சி அளித்தல். உயிர் எழுத்துகளையும் மெய் எழுத்துகளையும் முறையாக எழுதப்படிக்க செய்தல் ஆகியன ஆகும்.
 
														திருவண்ணாமலை மாவட்டத்தில் கருத்தாளராகப் பொறுப்பேற்று அம்மாவட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது பயிற்சியையும் எனது நூலையும் கொடுத்து மாவட்டம் முழுமையும் ஆய்வு செய்யப்பட்டது 3 மாதங்களில் அனைத்து குழந்தைகளையும் தமிழ் எழுத படிக்க வைத்து 1,56,710 மாணவர்களை ஒரே நேரத்தில் வாசிக்க எழுதச் செய்தோம் எனது ஆய்வு இறைவன் அருளால் மாவட்டம் முழுமைக்கும் குழந்தைகளிடையே வாசிப்புத் திறனையும் எழுதும் திறனையும் விரைவாக வளர்ந்தது. இந்நிகழ்வு உலக சாதனைக்கான முயற்சியாக மேற்கொண்டது. உலக சாதனை நிகழ்வில் கருத்தாளராக பணியாற்றியமைக்கு அம்மாவட்ட ஆட்சியர் உலக சாதனைக்கான சான்றிதழை தந்து பெருமைப்படுத்தினார். மாவட்ட கல்வி நிர்வாகம் எனது பயிற்சியின் விளைவாக ஏற்பட்ட முன்னேற்றத்திற்கான பின்னூட்டத்தை அளித்து பெருமைப் படுத்தினார்.